நாமக்கல் மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் பார்வையற்றோர் திடீர் உள்ளிருப்பு போராட்டம்


நாமக்கல் மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் பார்வையற்றோர் திடீர் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 10 Feb 2021 12:05 AM IST (Updated: 10 Feb 2021 12:05 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் பார்வையற்றோர் திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் கண் பார்வையற்றோருக்கான நவீன செல்போன் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக 18 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட பார்வையற்றவர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதுவரை 110 பேருக்கு செல்போன்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று மதியம் 2 மணிக்கு சார்லஸ் என்பவர் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட பார்வையற்றோர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜான்சியிடம் கோரிக்கை மனு வழங்கி உடனடியாக செல்போன் தருமாறு வலியுறுத்தினர். தொடர்ந்து அதிகாரிகளுக்கும், பார்வையற்றவர்களுக்கும் இடையே வாக்குவாதம் நீடித்தது. இதனால் ஆவேசம் அடைந்த பார்வையற்றவர்கள் அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு 8.30 மணி வரை இந்த போராட்டம் நீடித்தது. மாவட்டம் முழுவதும் கண் பார்வையற்ற கல்லுாரி மாணவ, மாணவிகள், தொழில் முனைவோர், பெண்கள் உள்ளிட்டோருக்கு முக்கியத்துவம் கொடுத்து முன்னுரிமை அடிப்படையில் தகுதியானவர்களுக்கு உடனுக்குடன் செல்போன் வழங்கப்படுகிறது, தொடர்ந்து அனைவருக்கும் வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள்  கலைந்து சென்றனர்.

Next Story