தாராபுரத்தில் மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாலுகா அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


தாராபுரத்தில் மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாலுகா அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
x
தினத்தந்தி 10 Feb 2021 12:31 AM IST (Updated: 10 Feb 2021 12:31 AM IST)
t-max-icont-min-icon

தாராபுரத்தில் மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாலுகா அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

தாராபுரம்,:-
தாராபுரத்தில் மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாலுகா அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆர்ப்பாட்டம்-மறியல்
தாராபுரத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றித்தரும்படி நேற்று தாராபுரம் தாலுகா அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் அறிவித்திருந்தனர். 
அப்போது 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் தாலுகா அலுவலகம் முன்பு ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகளை ரூ.3 ஆயிரமாகவும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 ஆயிரமாக உயர்த்தி தரக்கோரியும். தனியார் துறைகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீத வேலைவாய்ப்பை தர உத்தரவாதம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி  கரூர்-பழனி செல்லும் பிரதான சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். 
குடியேறும் போராட்டம்
இதுகுறித்து தகவல் அறிந்த தாசில்தார் ராமலிங்கம், தாராபுரம்  துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயராம், இன்ஸ்பெக்டர் மகேந்திரன் ஆகியோர் மாற்றுத்திறனாளிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தொடர்ந்து தாசி்ல்தார் அலுவலகம் முன்பு குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாற்றுத்திறனாளிகளின் மாவட்ட செயலாளர் ராஜேஷ், கமிட்டி தலைவர் ஆனந்தன், தொழிற்சங்கத் தலைவர் என்.கனகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story