பணம் வைத்து சூதாடிய 10 பேர் கைது
பணம் வைத்து சூதாடிய 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட செஞ்சேரி நீலியம்மன் நகரில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி பெரம்பலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ் மற்றும் போலீசார் நேற்று செஞ்சேரிக்கு விரைந்தனர். அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தவர்களை போலீசார் வளைத்து பிடித்தனர். ேபாலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் அம்மாபாளையத்தை சேர்ந்த ராஜா(வயது 36), வேலுசாமி (48), பெரம்பலூர் நகர்ப்பகுதியில் திருவள்ளுவர் தெரு, திருநகர், ஆலம்பாடி சாலை, சங்குப்பேட்டை, மதனகோபாலபுரம், துறைமங்கலம் ஆகிய பகுதிகளை சேர்ந்த நீலகண்டன் (42), அழகர்சாமி (57), அன்புமதி (38), அஜீஸ் (55), சரவணன் (49), பழனிசாமி (35), நெடுவாசலை சேர்ந்த வேல்முருகன் (34), செஞ்சேரியை சேர்ந்த சசிகுமார் (45) ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்கள் மீது பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 10 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.6 ஆயிரம் ரொக்கம் மற்றும் சீட்டுக்கட்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story