செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்


செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Feb 2021 1:36 AM IST (Updated: 10 Feb 2021 1:36 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நெல்லை:

தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கம் சார்பில் பாளையங்கோட்டையில் உள்ள சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு புதிதாக தொடங்கி உள்ள மினி கிளினிக் திட்டத்துக்காக துணை சுகாதார நிலையங்களை பயன்படுத்துவதை கைவிட வேண்டும். இதற்காக பராமரிப்பு, சுவரொட்டிகள், பதிவேடுகள் அனைத்தையும் கிராம சுகாதார செவிலியர்கள் தங்களது சொந்த செலவில் மேற்கொள்ள நிர்பந்தம் செய்வதை கைவிட வேண்டும். இதற்காக தனியாக நிதியை அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும். மினி கிளினிக்கிற்கு தனியாக டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில துணைத்தலைவர் ரெமா தலைமை தாங்கினார். நெல்லை மாவட்ட செயலாளர் முருகம்மாள், பொருளாளர் தங்கராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சங்கரன்கோவில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் லதா மங்கையர்க்கரசி தலைமை தாங்கினார்.  மாநில தலைவர் பால்நிர்மலா, மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வி, பொருளாளர் மரியசெல்வம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் செவிலியர்கள் திரளாக கலந்து கொண்டனர். துணை தலைவர் ஆண்டாள் நன்றி கூறினார்.

Next Story