நெல்லை அருகே லட்சுமி நாராயணர் கோவிலில் சத்ரு சம்ஹார பூஜை


நெல்லை அருகே லட்சுமி நாராயணர் கோவிலில் சத்ரு சம்ஹார பூஜை
x
தினத்தந்தி 10 Feb 2021 1:44 AM IST (Updated: 10 Feb 2021 1:44 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே உள்ள லட்சுமி நாராயணர் கோவிலில் சத்ரு சம்ஹார பூஜை நடந்தது.

நெல்லை:

நெல்லை அருகே உள்ள அருகன்குளம் ஜடாயு தீர்த்தத்தில் லட்சுமி நாராயணர், ஜடாயு கோவில் அமைந்துள்ளது. ராமாயண காலத்தில் ஜடாயு உயிர் நீத்த இடமான முக்தி ஸ்தலத்தில், ராமர் ஜடாயுவுக்கு தில தர்ப்பணம் கொடுத்துள்ளார். அங்கு நேற்று சத்ரு சம்ஹார பூஜை நடைபெற்றது. இதையொட்டி கோவில் வளாகத்தில் யாகசாலை அமைத்து பூஜை நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Next Story