புதிதாக 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


புதிதாக 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 10 Feb 2021 1:46 AM IST (Updated: 10 Feb 2021 1:46 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் நேற்று புதிதாக 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது

மதுரை
மதுரையில் நேற்று புதிதாக 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 4 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இதன் மூலம் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 98 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மதுரையில் சிகிச்சையில் இருந்து நேற்று 9 குணமடைந்து வீடு திரும்பினார்கள். இதில் 7 பேர் நகர் பகுதியையும், 2 பேர் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். அவர்களுடன் சேர்ந்து மதுரையில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 549 ஆக அதிகரித்து உள்ளது. இவர்களை தவிர அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் 86 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Next Story