சேலத்தில் அரசு ஊழியர்கள் சாலை மறியல்


சேலத்தில் அரசு ஊழியர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 10 Feb 2021 3:15 AM IST (Updated: 10 Feb 2021 3:15 AM IST)
t-max-icont-min-icon

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அரசு ஊழியர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்:
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அரசு ஊழியர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலைமறியல்
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஜாக்டோ-ஜியோ அமைப்பின் போராட்டத்தில் பங்கேற்றதற்காக 5,068 பேருக்கு வழங்கப்பட்ட குற்ற குறிப்பாணைகளை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் தொடர் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 
இந்த நிலையில் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே அரசு ஊழியர் சங்கத்தினர் மாவட்ட துணைத்தலைவர் ராணி தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. 
கைது
இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்பட 35 அரசு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் போலீஸ் வேனில் ஏற்றப்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே உள்ள திருமண மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர்.

Next Story