சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு திருவோடு ஏந்தி மனு கொடுக்க வந்த பெண்கள்


சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு திருவோடு ஏந்தி மனு கொடுக்க வந்த பெண்கள்
x
தினத்தந்தி 10 Feb 2021 3:21 AM IST (Updated: 10 Feb 2021 3:21 AM IST)
t-max-icont-min-icon

சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு திருவோடு ஏந்தி பெண்கள் மனு கொடுக்க வந்தனர்.

சேலம்:
சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு திருவோடு ஏந்தி பெண்கள் மனு கொடுக்க வந்தனர்.
திருவோடு ஏந்தி வந்த பெண்கள்
சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று பெண்கள் சிலர் மனு கொடுப்பதற்காக வந்தனர். அப்போது அவர்கள் திருவோடு ஏந்தி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 
பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்துள்ள மனுவில், ‘சேலம் பள்ளப்பட்டி பகுதியில் கடந்த ஓராண்டுக்கு மேலாக முதியவர் உதவித்தொகை மற்றும் விதவை உதவித்தொகை கேட்டு ஏராளமானவர்கள் விண்ணப்பித்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் சிலர் உதவித்தொகை பெற்று தர லஞ்சம் கேட்கின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு உதவித்தொகை கிடைக்க ஆவண செய்ய வேண்டும்’ என்று கூறி உள்ளனர்.

Next Story