திண்டுக்கல்லில் தேஜஸ் ரெயில் நின்று செல்ல அனுமதி


image courtesy:Reuters
x
image courtesy:Reuters
தினத்தந்தி 10 Feb 2021 3:31 AM IST (Updated: 10 Feb 2021 3:31 AM IST)
t-max-icont-min-icon

வருகிற ஏப்ரல் 2-ந்தேதி முதல் 6 மாதங்களுக்கு திண்டுக்கல்லில் தேஜஸ் ரெயில் நின்று செல்வதற்கு ரெயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.

திண்டுக்கல்:
திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் வடமாநிலங்களுக்கு செல்லும் ரெயில்கள் உள்பட 80-க்கும் மேற்பட்ட ரெயில்கள் நின்று செல்கின்றன. 

ஆனால், சென்னை-மதுரை இடையே இயக்கப்படும் தேஜஸ் ரெயில் மட்டும் திண்டுக்கல்லில் நிற்பது இல்லை. 

அதேநேரம் திண்டுக்கல் அருகேயுள்ள கொடைரோட்டில் தேஜஸ் ரெயில் நின்று செல்கிறது. இது திண்டுக்கல் மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.  

 எனவே, தேஜஸ் ரெயில் திண்டுக்கல்லில் நின்று செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். 

இந்த நிலையில் வருகிற ஏப்ரல் 2-ந்தேதி முதல் 6 மாதங்களுக்கு திண்டுக்கல்லில் தேஜஸ் ரெயில் நின்று செல்வதற்கு ரெயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.

Next Story