ஈரோடு கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மீது லஞ்ச புகார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் வியாபாரி மனு


ஈரோடு கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மீது லஞ்ச புகார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் வியாபாரி மனு
x
தினத்தந்தி 10 Feb 2021 3:32 AM IST (Updated: 10 Feb 2021 3:32 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்கியதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் வியாபாரி புகாா் மனு அளித்துள்ளாா்.

ஈரோடு
ஈரோடு கருங்கல்பாளையம் காந்திபுரம் மில் வீதியை சேர்ந்தவர் கோபாலன் (வயது 61). பொறி வியாபாரி. இவர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறிஇருந்ததாவது:-
ஈரோடு கருங்கல்பாளையம் சோதனை சாவடி வழியாக பொறி வியாபாரம் செய்து கொண்டு எனது இருசக்கர வாகனத்தில் வந்தேன். அப்போது அங்கு பணியில் ஈடுபட்டு இருந்த போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் என்னை வழிமறித்து லஞ்சம் கேட்டார். நான் லஞ்சம் கொடுக்க மறுத்ததால், என்னிடம் இருசக்கர வாகனத்துக்கு உரிய ஆவணங்கள் உள்ளதா? என்று கேட்டு மிரட்டினார். எனவே என்னிடம் லஞ்சம் கேட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறிஇருந்தார்.

Next Story