ஈமு கோழி வளர்ப்பதாக ரூ.200 கோடி மோசடி செய்த தனியார் நிறுவன சொத்துகளை ஏலம் விட கோர்ட்டு அனுமதி
ஈமு கோழி வளர்ப்பதாக ரூ.200 கோடி மோசடி செய்த தனியார் நிறுவன சொத்துகளை ஏலம் விட கோர்ட்டு அனுமதியளித்துள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சுசி ஈமு கோழி வளர்ப்பு நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தை சேர்ந்த உரிமையாளர் குருசாமி, கூடுதல் வட்டி தருவதாக ஏராளமானவர்களிடம் பணம் வசூலித்தார். சுமார் ரூ.200 கோடி வரை மோசடி நடைபெற்றதாக கூறப்படுகிறது. இது குறித்து கடந்த 2015-ம் ஆண்டு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து குருசாமி மற்றும் அவருடைய மனைவி ஆகியோரை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை கோவை முதலீட்டாளர் பாதுகாப்பு கோர்ட்டில் (டேன்பிட்) நடந்து வருகிறது. இந்த நிலையில் பெருந்துறையில் உள்ள சுசி ஈமு நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துக்களை ஏலம் விட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க அனுமதி வழங்க வேண்டும் என்று அரசு தரப்பு வக்கீல் மனு அளித்தார்.
இந்த மனுவை ஏற்ற நீதிபதி ரவி, பெருந்துறையில் உள்ள சுசி ஈமு சொத்துக்களை பொது ஏலம்விட அனுமதி அளித்தார்.
Related Tags :
Next Story