மகன் கண் எதிரே பெண் பலி


மகன் கண் எதிரே பெண் பலி
x
தினத்தந்தி 10 Feb 2021 4:23 AM IST (Updated: 10 Feb 2021 4:23 AM IST)
t-max-icont-min-icon

மகன் கண் எதிரே பெண் பலி

வீரபாண்டி:
திருப்பூர் முருகம்பாளையத்தை சேர்ந்த வேலுச்சாமி என்பவரின் மனைவி அருக்காணி (வயது 45). தொழிலாளி. 
இவரது மகன் சங்கர் (23). நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் இடுவம்பாளையம் பகுதியிலிருந்து பல்லடம் சாலை வழியாக மோட்டார்சைக்கிளில் சங்கர் சென்று கொண்டிருந்தார். அந்த வண்டியில் அருக்காணி பின்னால் அமர்ந்திருந்தார்.   முருகம்பாளையம் கோடீஸ்வரா சந்திப்பு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த தண்ணீர் லாரி  இவர்கள் சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார்சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த அருக்காணி தவறி விழுந்து லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி மகன் கண் எதிரே உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். உடனடியாக டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார்.  இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வீரபாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகுராஜா மற்றும் போலீசார் அருக்காணியின் உடலை மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு  பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.  மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் திருப்பூர் இடுவம்பாளையம் கொம்பன் தோட்டம் பகுதியைச்சேர்ந்த மாடசாமி (34) என்பவர் லாரியை ஓட்டி வந்தது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர். இது குறித்து அருக்காணியின் கணவர் வேலுச்சாமி கொடுத்த புகாரின் பேரில் வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story