செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 37 பேர் பாதிப்பு


செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 37 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 10 Feb 2021 7:15 AM IST (Updated: 10 Feb 2021 7:15 AM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 37 பேர் பாதிக்கப்பட்டனர்.

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 37 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 51 ஆயிரத்து 875 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 50 ஆயிரத்து 848 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 771 ஆக உயர்ந்தது. 256 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 11 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29 ஆயிரத்து 342 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 28 ஆயிரத்து 795 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுவரை காஞ்சீபுரம் மாவட்டத்தில் 440 பேர் உயிரிழந்துள்ளனர். 107 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 35 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 43 ஆயிரத்து 771 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 42 ஆயிரத்து 839 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 240 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 692 பேர் கொரானா தொற்றால் இறந்துள்ளனர். நேற்று மாவட்டம் முழுவதும் ஒருவர் இறந்துள்ளார்.

Next Story