போலி ஆவணங்கள் மூலம் ரூ.2½ கோடி நிலம் அபகரிப்பு - சென்னையில் 3 பேர் கைது
போலி ஆவணங்கள் மூலம் ரூ.2½ கோடி நிலம் அபகரித்துவிட்டதாக சென்னையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை,
சென்னை திருநின்றவூர் சரஸ்வதி நகரில், நம்பிக்கை நாதன் என்பவருக்கு சொந்தமாக ரூ.2½ கோடி மதிப்புள்ள நிலம் இருந்தது. இந்த நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் சிலர் அபகரித்துவிட்டதாகவும், அதை மீட்டுத்தர வேண்டும் என்றும் நம்பிக்கை நாதன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனு அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
நிலத்தை அபகரித்ததாக திருநின்றவூரைச் சேர்ந்த வெங்கடேசன் (வயது 57), அவரது தம்பி முருகன் (46) மற்றும் புண்ணியகோட்டி (46) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டதாகவும், தொடர்ந்து விசாரணை நடப்பதாகவும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story