132 பேருக்கு கொரோனா தடுப்பூசி
தினத்தந்தி 10 Feb 2021 8:32 PM IST (Updated: 10 Feb 2021 8:32 PM IST)
Text Size132 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி உள்பட 5 மையங்களில் தொடங்கி நடந்து வருகிறது. 24-வது நாளான நேற்று ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் 4 டாக்டர்கள், 10 செவிலியர், 9 மருந்தாளுனர், 16 சுகாதார பணியாளர்கள், போலீஸ் காவலர்கள் 18 பேர், ஒரு தொழிலாளர் என 58 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதேபோல, பரமக்குடி சுகாதார வட்டத்தில் உள்ள 4 மையங்களில் நேற்று 74 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. மொத்தம் மாவட்டத்தில் நேற்று 132 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire