தூத்துக்குடியில் துறைமுக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
இந்திய துறைமுகங்களை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று தூத்துக்குடியில் துறைமுக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி:
இந்திய துறைமுகங்களை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று தூத்துக்குடியில் துறைமுக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக நிர்வாக அலுவலகம் முன்பு துறைமுக தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆப்பாட்டத்துக்கு துறைமுக ஜனநாயக ஊழியர் சங்க செயலாளர் ரசல் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் இந்திய துறைமுகங்களை தனியார் மயமாக்க வழி வகுக்கும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர்.
பங்கேற்றோர்
ஆர்ப்பாட்டத்தில் ஐ.என்.டி.யு.சி. மாநில துணைத்தலைவர் கதிர்வேல், துறைமுக ஊழியர்கள் சங்க சங்கரலிங்கம், பரமசிவன் துறைமுக மெரைனர் மற்றும் பொது ஊழியர்கள் சங்கம் சத்யா, சுரேஷ், ஆசான், துறைமுக பொது ஊழியர்கள் சங்கம் செல்வக்குமார், ஆரோக்கியசாமி, பிரவீன், துறைமுக அண்ணா டாக் சங்கம் சண்முககுமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story