வேட்டவலம்; தெரு நாய்கள் கடித்து 22 செம்மறி ஆடுகள் சாவு
வேட்டவலம் அருகே தெரு நாய்கள் கடித்து குதறியதில் 22 செம்மறி ஆடுகள் உயிரிழந்தன.
வேட்டவலம்
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தை அடுத்த ஆங்குணம் கிராமத்தில் வசிப்பவர் ரங்கசாமி. இவரின் மகன் ராகவன் (வயது 26), விவசாயி. இவர், 60-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். இவர் வழக்கம் போல் செம்மறி ஆடுகளை மேய்த்து விட்டு இரவு வீட்டு அருகே உள்ள பட்டியில் அடைத்து வைத்திருந்தார்.
ஆடுகளின் அலறல் சத்தத்தைக்கேட்டு வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்து பட்டியை பார்த்தார். அப்போது 22 செம்மறி ஆடுகள் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தன. ராகவன் பட்டிக்கு அருகில் சென்று பார்த்தார். அப்பகுதியில் 5-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் வாயில் ரத்த கரை படிந்தபடி வலம் வந்தன. எனவே செம்மறி ஆடுகளை தெருநாய்கள் கடித்துக் குதறியதால் உயிரிழந்து இருக்கலாம் எனத் தெரிய வந்தது.
இதுகுறித்து அவர், கால்நடைத்துறைக்கும், வருவாய்த்துறைக்கும் தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் பன்னியூர் கிராம நிர்வாக அலுவலர் குமார், ஆவூர் கால்நடை டாக்டர் கவிதா ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
Related Tags :
Next Story