கள்ளக்குறிச்சி வாரச்சந்தையில் ரூ.1½ கோடிக்கு பருத்தி விற்பனை
கள்ளக்குறிச்சி வாரச்சந்தையில் ரூ.1½ கோடிக்கு பருத்தி விற்பனை
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி நேபால் தெருவில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் புதன்கிழமை பருத்தி சந்தை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்று நடந்த வாரச்சந்தைக்கு கள்ளக்குறிச்சி, விழுப்பரம், கடலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 1,019 விவசாயிகள் 6 ஆயிரத்து 657 பருத்தி மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். அதில் எல்.ஆர்.ஏ. ரகம் பருத்தி ஒரு குவிண்டால் அதிக பட்ச விலையாக ரூ.7 ஆயிரத்து 384-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.5 ஆயிரத்து 69-க்கும் விற்பனையானது. இந்த வாரச்சந்தையில் ஆத்தூர், மகுடஞ்சாவடி, கொங்கனாபுரம், சத்தியமங்கலம், புஞ்சை புளியம்பட்டி, அன்னூர், திருப்பூர், விழுப்புரம், கும்பகோணம் ஆகிய பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு பருத்தியை கொள்முதல் செய்து சென்றனர். நேற்று நடைபெற்ற வாரச்சந்தையில் ரூ.1 கோடியே 55 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானதாக வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மேலாண்மை இயக்குனர் சஞ்சீவி தெரிவித்தார்.
Related Tags :
Next Story