கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் துணை வாக்குச்சாவடி மையங்கள் அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் துணை வாக்குச்சாவடி மையங்கள் அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம்
கள்ளக்குறிச்சி,
வருகிற சட்டமன்ற தேர்தலையொட்டி ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடி மையங்களை இரண்டாக பிரித்து துணை வாக்குச்சாவடி மையங்கள் அமைப்பது தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கிரண்குராலா தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த், திருக்கோவிலூர் கோட்டாட்சியர் சாய்வர்தினி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வருகிற (2021) சட்டமன்ற தேர்தல் தொடர்பாக ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடி மையங்களை இரண்டாக பிரித்து துணை வாக்குச்சாவடி மையங்கள் அமைத்திட உத்தரவிட்டுள்ளது.
துணை வாக்குச்சாவடி மையங்கள்
அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி(தனி) ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 1,272 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இதில் ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் வாக்குச்சாவடி மையங்கள் உள்ள உளுந்தூர்பேட்டை தொகுதியில் கூடுதலாக 90 துணை வாக்குச்சாவடி மையங்களும், ரிஷிவந்தியம் தொகுதியில் 87 துணை வாக்குச்சாவடி மையங்களும், சங்கராபுரம் தொகுதியில் 93 துணை வாக்குச்சாவடி மையங்களும், கள்ளக்குறிச்சி தொகுதியில் 101 துணை வாக்குச்சாவடி மையங்களும் அமைப்பது குறித்து கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது. இதில் தேர்தல் தனி தாசில்தார் மணிகண்டன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story