திண்டிவனத்தில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்


திண்டிவனத்தில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Feb 2021 10:56 PM IST (Updated: 10 Feb 2021 10:56 PM IST)
t-max-icont-min-icon

விவசாய வேளாண் சட்டத்தை ரத்து செய்யக்கோரி திண்டிவனத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டிவனம், 

திருத்தம் செய்யப்பட்ட வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரியும், இந்த கோரிக்கைக்காக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் திண்டிவனம் வ.உ.சி. திடலில் நகர காங்கிரஸ் கட்சியினர்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
ஆர்ப்பாட்டத்திற்கு திண்டிவனம் நகர தலைவர் விநாயகம் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் தனுஷ், நகர துணைத்தலைவர்கள் தட்சிணாமூர்த்தி, தங்கவேல், மாவட்ட செயலாளர் ஜானகிராமன், நகர பொதுச்செயலாளர்கள் பொன்ராஜா, விஜயன், நிர்வாகிகள் அஜிஸ், ரகமத்துல்லா, ஜெய்கணேஷ், மதன்குமார், கதிர்வேல், மோகன்குமார், நாராயணசாமி, தயாளன், மகளிரணி ஜெயந்தி, சுமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டேரிப்பட்டு 

இதேபோல் கூட்டேரிப்பட்டு நான்கு முனை சந்திப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மயிலம் வட்டார தலைவர் இல.கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் கருணாகரன். விக்கிரவாண்டி நகர தலைவர் குமார், மாவட்ட பொதுச்செயலாளர் பரமேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மயிலம் தொகுதி சமூக ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் பாபு வரவேற்றார். விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் ரமேஷ் கண்டன உரையாற்றினார். இதில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சந்திரன், மெடிக்கல் செல்வம், மாவட்ட செயலாளர்கள் அர்ஜூனன், வட்டார துணை தலைவர் சீதா, தாமோதரன், அருமை செல்வம், இருதயராஜ், சமூக ஊடக பிரிவு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன், தகவல் தொழில் நுட்ப பிரிவு அறிவழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story