குடியிருப்போர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
குடிநீர் நிறுவனத்தை மூடக்கோரி குடியிருப்போர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விழுப்புரம்,
விழுப்புரம் கமலா கண்ணப்பன் நகர், காமதேனு நகர், குழந்தைவேலு நகர், அஜீஸ் நகர், அக்பர் நகர், அசோக் நகர், இந்திரா நகர், அலமேலுபுரம் ஆகிய பகுதிகளின் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில் 10 ஆண்டுகளாக உரிமம் இன்றி செயல்படும் தனியார் குடிநீர் நிறுவனத்தை மூட வேண்டும், கோவிந்தசாமி நகரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள சமுதாய கூடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பன உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு குடியிருப்போர் நலச்சங்க தலைவர் பக்கிரிசாமி தலைமை தாங்கினார். .சுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார். இதில் நிர்வாகிகள் தாஜிதீன், கண்ணன், அகமது இப்ராகிம், ரகமதுல்லா, அப்துல், அஜீம், துரை, முபாரக், ஆர்.வி.கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திருப்பதி பாலாஜி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story