மாவட்டத்தில் புதிதாக 4 பேருக்கு கொரோனா தொற்று
மாவட்டத்தில் புதிதாக 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கரூர்
கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள பட்டியலில் கரூர் மாவட்டத்தில் புதிதாக 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி கடவூரை சேர்ந்த 26 வயது பெண், பஞ்சமாதேவியை சேர்ந்த 21 வயது வாலிபர், அரவக்குறிச்சியை சேர்ந்த 51 வயது ஆண் மற்றும் 63 வயது முதியவர் உள்ளிட்ட 4 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story