சிமெண்டு விற்பனையில் ரூ.15 லட்சம் மோசடி


சிமெண்டு விற்பனையில் ரூ.15 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 10 Feb 2021 6:39 PM GMT (Updated: 10 Feb 2021 6:39 PM GMT)

கரூரில் ஏமூர் பகுதியில் சிமெண்டு விற்பனையில் ரூ.15 லட்சம் மோசடி செய்த குடோன் பொறுப்பாளரை போலீசார் கைது செய்து விசாரைண நடத்தி வருகின்றனர்.

கரூர்
சிமெண்டு விற்பனையில் மோசடி
கரூர் அருகே ஏமூர் பகுதியில் உள்ள கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்னையை சேர்ந்த ஒரு தனியார் சிமெண்டு நிறுவனத்திற்கு சொந்தமான குடோன் ஒன்று உள்ளது. இங்கு ஆத்தூர் ரயில்வே காந்திநகரை சேர்ந்த ரமணன் (வயது 32) என்பவர் சிமெண்டு குடோன் பொறுப்பாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.  இந்தநிலையில் அந்த நிறுவனத்தின் சேலம் மண்டல மேலாளராக இருக்கும் சிவராமகிருஷ்ணன் கடந்த டிசம்பர் மாதம் ஏமூரில் அமைந்துள்ள சிமெண்டு குடோனை ஆய்வு செய்துள்ளார். அப்போது ரூ.15 லட்சம் மதிப்புள்ள 185.8 டன் சிமெண்டு விற்பனையில் மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. 
கைது
இந்த முறைகேடு குறித்து சிவராமகிருஷ்ணன் கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகர் வழக்குப்பதிந்து, சிமெண்டு விற்பனையில் மோசடியில் ஈடுபட்ட குடோன் பொறுப்பாளர் ரமணனை நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Next Story