முந்திரி செடிகளில் பூச்சி தாக்குதல்


முந்திரி செடிகளில் பூச்சி தாக்குதல்
x
தினத்தந்தி 11 Feb 2021 12:16 AM IST (Updated: 11 Feb 2021 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆதனக்கோட்டை பகுதியில் முந்திரி செடிகளில் பூச்சி தாக்குதல் காணப்படுகிறது.

ஆதனக்கோட்டை
ஆதனக்கோட்டை பகுதியில் முந்திரி செடிகளில் பூச்சி தாக்குதல் காணப்படுகிறது.
முந்திரி சாகுபடி
ஆதனக்கோட்டை, கந்தர்வகோட்டை, கறம்பக்குடி, ஆலங்குடி, அறந்தாங்கி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் முந்திரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆதனக்கோட்டை பகுதியில் பயிரிடப்பட்டுள்ள முந்திரி செடிகளில் பூச்சி தாக்குதல் காணப்படுகிறது.
இந்த பூச்சி தாக்குதால் முனிக்கருகள் நோய் ஏற்பட்டு இலைகள் காய்ந்து சருகாக கொட்டுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை காய்ப்பு திறன் உள்ள காலமாக இருப்பதால் தற்போது இந்த நுனி கருகல் நோய் தாக்கத்தால் பூக்கும் வாய்ப்பு குறைந்துள்ளது.
கோரிக்கை
 இதனால் இந்த ஆண்டு முந்திரிகொட்டை மகசூல் குறைந்துவிடுமோ என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர். எனவே தோட்டக்கலைதுறை அதிகாரிகள் ஆதனக்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் உள்ள முந்திரிகளில் தாக்கப்பட்டுள்ள பூச்சிகளை கண்டறிந்து அதற்கேற்றவாறு மானிய விலையில் பூச்சிக்கொல்லி மருந்துகள் வழங்கிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story