புதிய வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.


புதிய வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
x
தினத்தந்தி 11 Feb 2021 12:34 AM IST (Updated: 11 Feb 2021 12:34 AM IST)
t-max-icont-min-icon

புதிய வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

கரூர்
கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புஞ்சைகடம்பங்குறிச்சி, வாங்கல் குப்புச்சிபாளையம் ஆகிய ஊராட்சிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் ரூ.4 கோடியே 87 லட்சத்து 16 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு புதிய வளர்ச்சி திட்டப்பணிகளை நேற்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பூமிபூஜையிட்டு தொடங்கி வைத்து, முடிவுற்ற திட்டப்பணிகளை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். 
முதலில், ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் புஞ்சை கடம்பங்குறிச்சி ஊராட்சி பெரியவள்ளிபாளையம் பகுதியில் ரூ.21 லட்சம் மதிப்பில் விவசாய சேமிப்பு கிடங்கு, வாங்கல் குப்புச்சிப்பாளையம் ஊராட்சியை சேர்ந்த காட்டூர் விநாயகர் கோவில், சீனிவாசபுரம் ஆதிதிராவிடர் காலனி பகுதியில் ரூ.17.28 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை, வேலாயுதம்பாளையம் பகுதியில் ரூ.22.49 லட்சம் மதிப்பில் விவசாய சேமிப்பு கிடங்கு, வாய்க்கால் பாலம், கோட்டை மேடு பகுதியில் ரூ.49.02 லட்சம் மதிப்பில் விவசாய கிடங்கு, வெள்ளத்தடுப்பு சுவர் ஆகிவை அமைப்பதற்கான பணிகளை பூமிபூஜையிட்டு தொடங்கி வைத்தார்.
மேலும், செக்குமேட்டுத்தெரு பகுதியில் ரூ.7.30 லட்சம் மதிப்பில் சாலைவசதியுடன் கூடிய வடிகால், தவுட்டுபாளையம் பகுதியில் ரூ.42.47 லட்சம் மதிப்பில் விவசாய சேமிப்பு கிடங்கு, வடிகால் வசதி, மகளிர் சுகாதார வளாகம்,, வாங்கல் பகுதியில் ரூ.84.13 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கான பணிகளை பூமிபூஜையிட்டு தொடங்கி வைத்தார். 
பின்னர் வாங்கல் குப்புச்சிபாளையம் ஊராட்சியை சேர்ந்த கருப்பம்பாளையம் பகுதியில் ரூ.15 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட சமுதாயகூடத்தையும் அமைச்சர் திறந்து வைத்தார்.

Next Story