மாகிக்கு தினசரி பஸ் சேவை
புதுவையில் இருந்து மாகிக்கு இன்று முதல் தினசரி பஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி,
புதுவையில் இருந்து மாகி பிராந்தியத்துக்கு புதுவை சாலை போக்குவரத்து கழக (பி.ஆர்.டி.சி.) பஸ் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் இந்த பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அடுத்தடுத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதையடுத்து இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. இதையடுத்து கடந்த 4-ந்தேதி முதல் ஒருநாள் விட்டு ஒரு நாள் புதுவையில் இருந்து மாகிக்கு பஸ் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது. இந்த பஸ் சேவையை தினந்தோறும் வழங்கவேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) முதல் நாள்தோறும் மாகிக்கு பஸ் சேவை வழங்கப்படுகிறது.
இந்த பஸ் புதுவை புதிய பஸ்நிலையத்தில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்படும். கடலூர், வடலூர், விருத்தாசலம், சேலம், கோவை, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு வழியாக இயக்கப்படுகிறது.
Related Tags :
Next Story