நெல்லையில் காங்கிரசார் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
டெல்லி போராட்டத்தில் பங்கேற்று இறந்த விவசாயிகளுக்காக நெல்லையில் காங்கிரசார் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
நெல்லை;
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் பங்ேகற்று இறந்த விவசாயிகளுக்காக, காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று நாடு முழுவதும் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். அதன்படி நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் பாளையங்கோட்டை பகுதி சார்பில், பாளையங்கோட்டை கோட்டூர் ரோட்டில் உள்ள காந்தி சிலை முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் தலைமை தாங்கினார். மண்டல தலைவர் மாரியப்பன் முன்னிலை வகித்தார். முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்தும் களக்காட்டில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரன், தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி தணுஷ்கோடி ஆதித்தன், நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.
Related Tags :
Next Story