பாரதிதாசன் பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் செல்வம் பொறுப்பேற்பு
பாரதிதாசன் பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் செல்வம் பொறுப்பேற்றுக்கொண்டார்.
மணிகண்டம்,
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வணிகவியல் மற்றும் மேலாண்மை துறையின் முன்னாள் தலைவரும், பேராசிரியருமான செல்வம் என்பவரை கவர்னர் பன்வாரிலால் புரோஹித் நியமனம் செய்து உத்தரவிட்டு இருந்தார். இதைத்தொடர்ந்து அவர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு பதிவாளர் (பொறுப்பு) கோபிநாத், மக்கள் ெதாடா்பு அதிகாரி சந்திரசேகர், பல்கலைக்கழக பணியாளர்கள் சங்க தலைவர் ராஜேந்திரன், செயலாளர் முருகானந்தம் மற்றும் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
Related Tags :
Next Story