மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக கணவன் கைது


மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக கணவன் கைது
x
தினத்தந்தி 11 Feb 2021 1:54 AM IST (Updated: 11 Feb 2021 1:54 AM IST)
t-max-icont-min-icon

மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக கணவன் கைது

வாடிப்பட்டி,
மதுரை அருகே பரவை மேலரத வீதியை சேர்ந்தவர் ராக்கப்பன் மகன் வேல்முருகன் (வயது 33). இவரது மனைவி கார்த்திகைசெல்வி (25). வேல்முருகன் பரவை காய்கறி மார்க்கெட்டில் லோடு மேனாக வேைல பார்த்து வந்தார். நேற்று முன் தினம் ஏற்பட்ட குடும்ப தகராறில் கார்த்திகை செல்வி தனது குழந்தைகள் கவிதர்ஷினி (3), தங்கேஸ்வரன் (2) ஆகிய 2 குழந்தைகளை தீ வைத்து எரித்துக் ெகான்று தானும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீஸ் துணை சூப்பிரண்டு வழக்குப்பதிவு செய்தார். திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் நேற்று மதுரை ஆர்.டி.ஓ. மேல் விசாரணை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக வேல்முருகனை போலீசார் கைது செய்தனர்.

Next Story