2 கடைகளில் திருட்டு
வேப்பந்தட்டையில், 2 கடைகளின் பூட்டை உடைத்து திருடப்பட்டது
வேப்பந்தட்டை
2 கடைகளில் திருட்டு
வேப்பந்தட்டையில் பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் பூச்சி மருந்து கடை நடத்தி வருபவர் பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த மாயகிருஷ்ணன் (வயது35). நேற்று முன்தினம் இரவு, இவரது கடைக்கு வந்த மர்ம நபர் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கு கல்லாப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்தை திருடினார். பின்னர், வேப்பந்தட்டை யூனியன் அலுவலகத்திற்கு எதிரே சூப்பர் மார்க்கெட் நடத்தி வரும் கருப்பையா (34) என்பவரது கடையின் பூட்டையும் உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர் அங்கு கல்லாவில் வைக்கப்பட்டிருந்த ரூ.ஆயிரத்தை திருடினார். இந்த காட்சி அந்த கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
மொபட்
இதேபோல் வேப்பந்தட்டை பெட்ரோல் விற்பனை நிலையம் எதிரே வசித்து வரும் சேகர் (48) வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மொபட்டும் திருட்டு போனது. இதுகுறித்து 3 பேரும் தனித்தனியே கொடுத்த புகாரின்பேரில், அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 இடங்களில் திருடிச் சென்றது ஒருவரா? அல்லது பலர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டனரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்ம நபரின் உருவத்தை வைத்து அவரை பிடிக்க போலீசார் வலை விரித்துள்ளனர்.

Related Tags :
Next Story