திருச்சியில் 2-வது நாளாக மாற்றுத்திறனாளிகள் மறியல்; பெண்கள் உள்பட 40 பேர் கைது
திருச்சியில் 2-வது நாளாக மாற்றுத்திறனாளிகள் மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 40 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி,
புதுச்சேரி மற்றும் தெலுங்கானாவில் உள்ளதுபோல், தமிழ்நாட்டிலும் மாதாந்திர உதவித்தொகையாக மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நேற்று 2-வது நாளாக தொடர் போராட்டம் நடத்தினர். திருச்சி மத்திய பஸ் நிலையம் பெரியார் சிலை அருகில் மணிகண்டம் ஒன்றிய செயலாளர் ஆரோக்கியராஜ் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக போராட்டத்தை மாவட்ட தலைவர் ஜெயபால் தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட செயலாளர் கோபிநாத், மாநில துணைச் செயலாளர் புஷ்பநாதன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மறியலின்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. அதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 17 பெண்கள் உள்ளிட்ட 40 பேரை கண்டோன்மெண்ட் போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story