கடையம் முப்பிடாதி அம்மன், பத்திரகாளி அம்மன் தேர் சந்திப்பு நிகழ்ச்சி


கடையம் முப்பிடாதி அம்மன், பத்திரகாளி அம்மன் தேர் சந்திப்பு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 11 Feb 2021 2:38 AM IST (Updated: 11 Feb 2021 2:38 AM IST)
t-max-icont-min-icon

கடையம் முப்பிடாதி அம்மன், பத்திரகாளி அம்மன் தேர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

கடையம்:

தெற்கு கடையம் முப்புடாதி அம்மன், கீழக்கடையம் 18 பட்டி நாடார்களுக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா கடந்த 26-ந் தேதி கால் நாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து 2-ந் தேதி திருவிழாவுடன் தொடங்கி நிகழ்ச்சி நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் பல்வேறு சமூகத்தினர் சார்பில் மண்டகப்படி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நேற்று முன்தினம் அம்மன் தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு அலதீர்த்தம் எடுத்து வந்து அம்மன் வீதிஉலா நடைபெற்றது. நேற்று அதிகாலை 4 மணிக்கு முப்புடாதி அம்மன் சிறப்பு ஆராதனைக்கு பின்பு தேருக்கு எழுந்தருளினார். தொடர்ந்து தேரோட்டம் நடந்தது.
இதேபோல் கீழக்கடையம் பத்திரகாளி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு தினமும் அம்பாளுக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. 
நேற்று முன்தினம் அதிகாலை 4 மணிக்கு அம்பாள் தேருக்கு எழுந்தருளி மூல கோவிலான கடையம் ராமநதி அணைக்கு செல்லும் வழியில் உள்ள பத்திரகாளியம்மன் கோவிலுக்கு தேரோட்டம் நடைபெற்றது. தெற்கு கடையம் விநாயகர் கோவில் முன்பு முப்புடாதி அம்மன், பத்திரகாளி அம்மன் சந்திப்பு நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று காலையில் நடந்த சந்திப்பு நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.

Next Story