சிறுகனூர் அருகே மின் கசிவால் கொட்டகையில் தீ விபத்து; 4 ஆடுகள் கருகி செத்தன
சிறுகனூர் அருகே மின் கசிவால் கொட்டகையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 ஆடுகள் கருகி செத்தன
சிறுகனூர் அருகே மின் கசிவால் கொட்டகையில் தீ விபத்து; 4 ஆடுகள் கருகி செத்தன
சமயபுரம், பிப்.11-
சிறுகனூர் அருகே உள்ள ஆய்குடியை சேர்ந்தவர் துரைசாமி (வயது 60). கூலித்தொழிலாளியான இவர், ஆடுகள் வளர்த்து வருகிறார். ஆடுகளை மேய்த்து விட்டு இரவு கொட்டகையில் கட்டுவது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கொட்டகையின் மேல் இருந்த மின்கம்பியில் கசிவு ஏற்பட்டு கொட்டகை எரிந்து சாம்பலானது. மேலும் அங்கு கட்டப்பட்டிருந்த 10 ஆடுகளில் 4 ஆடுகள் தீயில் கருகிச்செத்தன. ஒரு ஆடு காயமடைந்தது. 5 ஆடுகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பின.
Related Tags :
Next Story