ஈரோடு தாலுகா அலுவலகத்தில் 2-வது நாளாக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
ஈரோடு தாலுகா அலுவலகத்தில் 2-வது நாளாக மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஈரோடு
மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உதவித்தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். அதிக பாதிப்பு உடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். தனியார் துறைகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஈரோடு தாலுகா அலுவலகத்தில் நேற்று முன்தினம் போராட்டம் தொடங்கியது. இந்த போராட்டம் நள்ளிரவிலும் தொடர்ந்தது. விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், நேற்று 2-வது நாளாக தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர். அவர்கள் அங்கேயே சமைத்து சாப்பிட்டனர். மேலும், பாய், தலையணை கொண்டு வந்து தங்கினர். தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வகையில் போராட்டம் தொடரும் என்று மாற்றுத்திறனாளிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story