பெத்தநாயக்கன்பாளையம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை: கட்டிட தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது

பெத்தநாயக்கன்பாளையம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை: கட்டிட தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 11 Feb 2021 3:43 AM IST (Updated: 11 Feb 2021 3:43 AM IST)
t-max-icont-min-icon

பெத்தநாயக்கன்பாளையம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டிட தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

பெத்தநாயக்கன்பாளையம்:
பெத்தநாயக்கன்பாளையம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டிட தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
பாலியல் தொல்லை
பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தாண்டானூர் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 40). கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி பின்னர் விவாகரத்து பெற்றுள்ளார். 
இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி, ராமலிங்கம் தோட்டத்தில் கட்டியிருந்த மாட்டை பிடித்து செல்வதற்காக வந்துள்ளார். அப்போது ராமலிங்கம் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. 
கைது
இதுபற்றி ஏத்தாப்பூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமலிங்கத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Next Story