கணவருடன் மோட்டார்சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் தாலிசங்கிலி பறிப்பு மா்மநபா்கள் 2 பேருக்கு வலைவீச்சு


கணவருடன் மோட்டார்சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் தாலிசங்கிலி பறிப்பு மா்மநபா்கள் 2 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 11 Feb 2021 4:15 AM IST (Updated: 11 Feb 2021 4:15 AM IST)
t-max-icont-min-icon

கணவருடன் மோட்டார்சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் தாலிசங்கிலியை பறித்துவிட்டு தப்பிய மா்மநபா்கள் 2 பேரை போலீசாா் வலைவீசி தேடி வருகிறாா்கள்.

பெருந்துறை
பெருந்துறை சென்னிமலை ரோடு, முத்து நகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 28). அவருடைய மனைவி சிவப்பிரியா (21). இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் மாலை பெருந்துறை சோளீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு மோட்டார்சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
சென்னிமலை ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, அவர்களுக்கு பின்புறமாக மோட்டார்சைக்கிளில் மர்மநபர்கள் 2 பேர் வந்து கொண்டிருந்தனர். திடீரென அவர்கள் சிவப்பிரியா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலிசங்கிலியை பறித்துவிட்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பித்து சென்றனர்.
இதுகுறித்து சதீஷ் பெருந்துறை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்கள் 2 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்.

Next Story