பேரூராட்சி பகுதிகளில் 100 நாள் வேலை திட்டத்தை அமல்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்
பேரூராட்சி பகுதிகளில் 100 நாள் வேலை திட்டத்தை அமல்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம் வலங்கைமானில் நடந்தது.
வலங்கைமான்,
100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக அதிகரிக்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளிலும் அமல்படுத்த வேண்டும். இந்த திட்டத்தில் தினக்கூலியாக ரூ.600 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் உள்ள ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் மருதையன், செயலாளர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் ராஜா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், நிர்வாக குழு உறுப்பினர்கள் கலியபெருமாள், உதயகுமார், கலியமூர்த்தி, கண்ணையன், சமத்துவ மக்கள் கழக மாவட்ட செயலாளர் காளிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story