திருவொற்றியூரில், கடைகளில் வேலை செய்த 3 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு
திருவொற்றியூரில் கடைகளில் வேலை செய்த 3 குழந்தை தொழிலாளர்களை மீட்டனர்.
திருவொற்றியூர்,
சென்னையில் ஆபரேசன் ஸ்மைல் என்ற பெயரில் கடந்த 1-ந் தேதி முதல் 15-ந்தேதி வரை காணாமல் போன குழந்தைகளை மீட்டல் ஆதரவு மற்றும் பாதுகாப்பு கோரும் குழந்தைகள், குழந்தை தொழிலாளர்களை மீட்டல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அதன்படி குழந்தைகள் பாதுகாப்பு துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் ரகசிய தகவலின்படி நேற்று காலை திருவொற்றியூர் காலடிபேட்டை மார்க்கெட்டில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மெக்கானிக் கடை, கூல்டிரிங்ஸ், ஜூஸ் கடைகளில் வேலை பார்த்த 3 குழந்தை தொழிலாளர்களை மீட்டனர். மேலும் அவர்கள் பெற்றோர் மீது நடவடிக்கை கோரி திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். மீட்கப்பட்ட 3 சிறுவர்களையும் கெல்லீஸ் குழந்தைகள் பாதுகாப்பு மையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
Related Tags :
Next Story