அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் திருவண்ணாமலை மாவட்டம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2-ந் தேதி முதல் திருவண்ணாமலையில் தொடர்ந்து சாலை மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று அவர்கள் திருவண்ணாமலை அண்ணாசிலை அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத் தலைவர் பார்த்தீபன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பிரபு கோரிக்கையை விளக்கி பேசினார்.
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட துறைத் தலைவர் அண்ணாமலை, சத்துணவு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் அண்ணாதுரை, வருவாய் துறையை சேர்ந்த ரகுபதி ஆகிேயார் வாழ்த்துரை வழங்கினர்.
இதில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர், எம்.ஆர்.பி. செவிலியர்கள், ஊர்ப்புற நூலகங்கள் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசுத் துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதில் பல்வேறு துறையை சேர்ந்த அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் வேங்கிடவரதன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story