சார்நிலை கருவூல அலுவலகத்திற்குள் புகுந்த பாம்பு


சார்நிலை கருவூல அலுவலகத்திற்குள் புகுந்த பாம்பு
x

திருவண்ணாமலை சார்நிலை கருவூல அலுவலகத்தில் பாம்பு புகுந்தது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை சார்நிலை கருவூல அலுவலகத்தில் பாம்பு புகுந்தது. 

திருவண்ணாமலை தாலுகா அலுவலக வளாகத்தில் தாலுகா அலுவலகம், குழந்தைகள் நல அலுவலகம், வட்ட வழங்கல் அலுவலகம், சார்நிலை கருவூல அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம் என பல்வேறு அலுவலகம் உள்ளது. 

இந்த நிலையில் இன்று காலை தாலுகா அலுவலக வளாகத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டது. 

சார்நிலை கருவூல அலுவலகத்தில் வழக்கம் போல் பணியாளர்கள் வேலைக்கு வந்து உள்ளனர். அப்போது அவ்வலுவலகத்தின் உள்பகுதியில் ஆவணங்கள் காப்பக அறையில் இருந்து பாம்பு ஒன்று வெளியே வருவதை பணியாளர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

 அதில் சிலர் அந்த பாம்பை பிடிக்க முயன்றனர். பாம்பு மீண்டும் அந்த அறைக்குள்ளேயே சென்று விட்டது. இதையடுத்து அவர்கள் திருவண்ணாமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 
அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு வீரைந்து வந்து பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 

இதையடுத்து அந்த அறையில் ஒளிந்து கிடந்த சுமார் 2 அடி நீளமுள்ள பாம்பை தீயணைப்பு வீரர்கள் அவர்கள் கொண்டு வந்த நவீன எந்திரத்தின் மூலம் பிடித்து ஒரு குழாயில் போட்டு அடைத்து வெளியே கொண்டு சென்று வனப் பகுதியில் விட்டனர். 

சார்நிலை கருவூல அலுவலகத்தில் பாம்பு புகுந்த சம்பவத்தினால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story