அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Feb 2021 8:11 PM IST (Updated: 11 Feb 2021 8:11 PM IST)
t-max-icont-min-icon

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தேனி:


புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கடந்த 2-ந்தேதி முதல் தொடர் ஆர்ப்பாட்டம், சாலை மறியலில் ஈடுபட்டனர். 


10-வது நாளான நேற்று அரசு ஊழியர் சங்கத்தினர் தேனி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக வந்தனர். 

பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு மாவட்ட இணைச்செயலாளர் முத்தையா தலைமை தாங்கினார். 

இதில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். 

பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

இந்த தொடர் போராட்டம் நேற்றுடன் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாகவும், வருகிற 19-ந்தேதி சென்னையில் முற்றுகை போராட்டம் நடத்த உள்ளதாகவும் அரசு ஊழியர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

Next Story