லாரி திடீரென தீப்பிடித்து எரிந்தது
உளுந்தூர்பேட்டையில் பெட்ரோல்பங்க் அருகே நின்ற லாரி திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது
உளுந்தூர்பேட்டை
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை-சென்னை மெயின் ரோட்டில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே நான்கு சக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடை உள்ளது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி ஒன்று நேற்று இரவு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். அதற்குள் லாரி முற்றிலும் சேதமடைந்து போனது. பெட்ரோல் பங்க் அருகே நிறுத்தப்பட்டிருந்த லாரி தீப்பற்றி எரிந்ததை அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story