வாலிபரை வெட்டிய 4 பேர் கைது
வாலிபரை வெட்டிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் சக்கரக்கோட்டை பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் நேற்றுமுன்தினம் இரவு சிலர் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். அப்போது ராமநாதபுரம் எம்.எஸ்.கே நகர் பகுதியை சேர்ந்த பால சசிக்குமார் மகன் பாலசபரிகிசோர் (வயது23) என்பவரை ஒரு கும்பல் சரமாரியாக தாக்கி வாள்கத்தியால் வெட்டினர். இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கமுதி கண்ணார்பட்டி குருவி ரமேஷ் (23), ராமநாதபுரம் சரவணன் (23), ஜெமினி ராஜ் (21), எம்.எஸ்.கே. நகர் மணிகண்ட பிரபு (28) ஆகிய 4 பேரை கைது செய்தனர். சம்பவம் தொடர்பாக எம்.எஸ்.கே.நகரை சேர்ந்த செல்வராஜ் மகன் கோயா என்ற விக்னேஷ், ஆர்.எஸ்.மடையை முனியசாமி மகன் குமார் என்ற கொக்கி குமார் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். கைதானவர்களிடம் வாள் கத்தியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
Related Tags :
Next Story