சாராயம் விற்றால் குண்டர் சட்டம் பாயும்
கச்சிராயப்பாளையம் அருகே சாராயம் விற்றால் குண்டர் சட்டம் பாயும் என பொதுமக்களை போலீசார் எச்சரித்தனர்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி அருகே கச்சிராயப்பாளையம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சாராயம் விற்பதை தடுப்பதற்காக போலீசார் தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கச்சிராயப்பாளையம் அருகே உள்ள கரடிசித்தூர் கிராமத்தில்சாராயம் விற்க சிலர் ஏலம் விடுவதாக கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கச்சிராயப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் நரசிம்மஜோதி, வினோத்குமார் ஆகியோர் கரடிசித்தூர் கிராமத்துக்கு சென்று சாராயம் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் மற்றும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடையே கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும் தெருத் தெருவாக சென்று சாராயம் விற்பவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்றும், அதற்கு துணை போகும் நபர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் தண்டோரா அடித்து எச்சரிக்கை செய்தார்கள்.
Related Tags :
Next Story