காவல்கிணறு, விக்கிரமசிங்கபுரத்தில் காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் காவல்கிணறு, விக்கிரமசிங்கபுரத்தில் காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பணகுடி:
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, காவல்கிணறு, விக்கிரமசிங்கபுரத்தில் காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காவல்கிணறு
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண்மை சட்டங்களை கண்டித்தும், அந்த சட்டங்களை ரத்து செய்யக்கோரியும் காவல்கிணறு சந்திப்பில் உள்ள மலர் வணிக வளாகம் முன்பு வள்ளியூர் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயகுமார் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேஷ் தன்ராஜ் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
விக்கிரமசிங்கபுரம்- முக்கூடல்
விக்கிரமசிங்கபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு நகர காங்கிரஸ் தலைவர் செல்லத்துரை தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் வின்சென்ட், அகில இந்திய ராகுல்காந்தி பேரவை செயல் தலைவர் ராமையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வேல்துரை, ரவி அருணன் ஆகியோர் பேசினர். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் சிவந்திபுரத்தில் அம்பை வட்டார தலைவர் சங்கர நாராயணன் தலைமையிலும், முக்கூடல் வம்பளந்தான்முக்கு காமராஜர் திடலில் வட்டார தலைவர் அரி நாராயணன் தலைமையிலும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story