ரூ.45 லட்சம் செலவில் கால்நடை மருத்துவமனை
உளுந்தூர்பேட்டை அருகே ரூ.45 லட்சம் செலவில் கால்நடை மருத்துவமனை அமைப்பதற்கு குமரகுரு எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்
உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சிக்காடு கிராமத்தில் ரூ.45 லட்சம் செலவில் புதிதாக கால்நடை மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும், திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினருமான குமரகுரு தலைமை தாங்கி கால்நடை மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். இதில் ஒன்றிய செயலாளர்கள் மணிராஜ், பழனிவேல், நகர செயலாளர் துரை, முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் சாய்ராம், அட்மா குழு தலைவர் சிக்காடு கோவிந்தன், கொளத்தூர் சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story