காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
சாயல்குடி,
சாயல்குடியில் காங்கிரஸ் சார்பில் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் சேசுமனோகரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை சேர்மன் வேல்சாமி, மாவட்ட துணைத்தலைவர் கணேசன்,நகர் காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் காமராஜ், மாவட்ட பொதுச்செயலாளர் போஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண் சட்டங்களைகொண்டு வந்த மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் நகர் தலைவர் ஜெயராஜ், நரிப்பையூர் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானசேகரன், மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவர் பெமிலா ராஜகுமாரி, மகிளா காங்கிரஸ் வட்டார தலைவர் ஈஸ்வரி ரமேஷ், கூரான்கோட்டை கிராம கமிட்டி தலைவர் மாரிமுத்து உள்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story