கண்டன ஆர்ப்பாட்டம்
பரமக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
பரமக்குடி,
பரமக்குடியில் தமிழர் மீட்பு களம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ராமநாதபுரம் மாவட்ட அவைத்தலைவர் வழிவிட்டான் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் விஜயகுமார், தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் ராஜதேவேந்திரர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது 7 உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என அரசாணை வெளியிட வலியுறுத்தியும் 15 சதவீத இட ஒதுக்கீட்டுடன் பட்டியலில் இருந்து வெளியேற்ற கோரியும், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தவ அஜித், தமிழர் மீட்பு களம் தலைவர் கரிகாலன், மாநில துணைத் தலைவர் ஆசிர் உள்பட நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர். இதில் மாநில மகளிரணி தலைவர் ராஜகனி, தென் மண்டல செயலாளர் மோகன் பாண்டியன், மாநில இளைஞரணி தலைவர் தனுஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் கணேசன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story