சிங்கம்புணரி,
சிங்கம்புணரியில் உள்ள சமுதாயக்கூடத்தில் பிரான்மலை அரசு வட்டார மருத்துவ அலுவலர் நபிஷா பானு தலைமையில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வந்த அனைத்து அரசு அலுவலக பணியாளர்களுக்கும் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதிக்கப்பட்டது. முகாமை டாக்டர்கள், செவிலியர்கள் என 20 பேர் கொண்ட குழுவினர் நடத்தினர். சிங்கம்புணரி தாசில்தார் ஜெயந்தி முதன்முதலில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர் ஜான் முகமது, காவல்துறை அதிகாரிகள், அரசு வட்டார மருத்துவமனை பணியாளர்கள் என 52 பேருக்கு கொரோனா தடுப்பூசி நேற்று ஒரே நாளில் போடப்பட்டது.