போலீசாருக்கு கொரோனா தடுப்பூசி
போலீசாருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி, பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் 16-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது போலீசாருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நேற்று பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் போலீசாரும், மாவட்ட ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பாராமன் தலைமையில் ஆயுதப்படை போலீசார் பலரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். நேற்று மட்டும் 77 போலீசார் உள்பட மொத்தம் 183 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. மாவட்டத்தில் இதுவரைக்கும் மொத்தம் 2,637 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story